Categories
லைப் ஸ்டைல்

மழைக்காலம் தொடங்கியாச்சு….. இது கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க….!!

மழைக்காலம் தெரிந்து வைக்க வேண்டிய குறிப்புகள்.

  • மழைக்காலங்களில் குழந்தைகள் இருக்கும் இடம், விளையாடும் இடம் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மழைக்காலத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு நாப்கின் அணியாமல் இருப்பதே நல்லது. அணிந்தாலும் அது ஈரமான உடன் அகற்றி விடுவது நல்லது. வெகுநேரம் ஈரமாக இருந்தால் பாக்டீரியாக்கள் பரவி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
  • மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க காட்டன் ஆடை அணிந்துவிடுங்கள். இது குழந்தைகளை குளிரிலிருந்து காப்பாற்றும்.
  • தரை குளிர்ச்சியாக இருந்தால் நியூஸ் பேப்பரை விரித்து அதற்குமேல் பாயை விரித்து அதனால் தரையின் குளிர்ச்சி தெரியாது.
  • வாகனங்கள் அதிகமாக மழையில் நனைந்தால் பிரேக் கிளட்ச் போன்றவற்றின் அடி பாகங்கள் துருப்பிடிக்கும்.

  • இடி, மின்னல் அடிக்கும் போது டிவி பழுதடையும். இதனை தவிர்ப்பதற்கு பவர் பிளக் மற்றும் ஆண்டனா இரண்டையும் கழற்றி விடுவது நல்லது.
  • மழைநீரை சேகரித்து அதனை காய்ச்சி முகம் கழுவி வருவதனால் சருமம் மிருதுவாக மாறும்.
  • சைலன்சர் நீரில் மூழ்கினால் வண்டி நின்று விடும். அப்போது வண்டியை ஸ்டார்ட் செய்ய கூடாது. மெக்கானிக் உதவியுடன் இன்ஜினை காயவைத்து பயன்படுத்தலாம்.
  • மழைக்காலத்தில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். இதனை தவிர்க்க நெருப்பில் வேப்பிலையை போட்டு புகை போடலாம்.
  • மழைக்காலத்தில் உடல்நல கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

Categories

Tech |