Categories
மாநில செய்திகள்

” மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் டுவிட்டர் பதிவு….!!

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் பொது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மழை காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் மின்சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் .மேலும் தொடர்புடையவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் மக்களுக்கு உதவும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |