ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறையப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜவுளிக்கடையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.