அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு காவல் நிலைய குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்று நிலத்தை அளக்க முயன்றனர்.
அப்போது அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த நபரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.