Categories
இந்திய சினிமா சினிமா

“மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அனிருத்”….. வெளியான புதிய அப்டேட்….. உற்சாகத்தில் ரசிகாஸ்….!!!!!!

இசையமைப்பாளர் அனிருத் மலையாள திரையுலகத்திற்கு அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமா உலகிற்கு தனுஷ் நடிப்பில் சென்ற 2012-ஆம் வருடம் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். இதையடுத்து எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

இந்த நிலையில் அனிருத் முதன்முறையாக மலையாள திரைப்படமொன்றில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கின்றார். இத்திரைப்படத்தை முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி நடிப்பதாகவும் இயக்குனர் ஹனீஃப் அடேனி இயக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த செய்தியானது அனிருத் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |