மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச்செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரை வேட்டையாடி சாப்பிடுகின்றன. அவ்வகையில் சிறுத்தை மலைப்பாம்பு இரண்டுமே கொடூர தன்மை கொண்டது தனது கண்ணில் சிக்கியதை உணவாக எடுத்துக் கொள்வது அவற்றின் பழக்கம். இந்நிலையில் Nature is scary கணக்கின் பயனர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
49 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில் மலைப்பாம்பு செல்வதை சிறுத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பாம்பின் முன்பு சென்று அதனுடன் சண்டை போட தொடங்குகிறது. பாம்பு தப்பிக்க முயற்சிக்கிறது. ஆனால் சிறுத்தை பின்தொடர்ந்து சென்று பாம்புடன் சண்டையிட்டு அதனை பிடித்துச் செல்கிறது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/i/status/1315518047071858688