விருமன் படக்குழு பட ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ள நிலையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது விருமன் திரைப்படத்தில் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார். சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படமானது குடும்ப திரைப்பட கதையாக உருவாகி வருகின்றது.
இந்த நிலையில் பட புரமோஷனுக்காக படகுழுவினர் மலேசியா சென்றுள்ளார்கள். அவர்கள் மலேசியாவில் சிறிய சொகுசு கப்பலில் செல்லும் புகைப்படங்கள் வெளியாக இருக்கின்றது. படத்தில் பாவாடை தாவணியில் அசத்தியுள்ள அதிதி இதில் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கி இருக்கின்றார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிதி ஹாலிவுட் ஹீரோயின் போல இருப்பதாக கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.