கணவர் ஒருவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் தனது மனைவியை மீட்டு தருமாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வசித்து வரும் தம்பதிகள் சாமி – ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால் அவ்வப்போது விடுமுறைக்காக மட்டும் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்று வந்துள்ளார். இதற்கிடையில் மனைவி ராஜேஸ்வரிக்கு புதுக்கோட்டையில் அரசு வேலை கிடைத்ததால் புதுக்கோட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க மீண்டும் மலேசியா சென்றுள்ளார்.
சாமி வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை தன் மனைவியின் வங்கி கணக்கில் போட்டு வந்துள்ளார். அதன்மூலம் ராஜேஸ்வரி தனக்கு தேவையான நகைகளை எடுத்து வசதியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் புதுக்கோட்டையில் அவர் வீட்டின் அருகில் குடியிருந்த நபர் ஒருவருக்கும் திருமணத்தை மீறிய தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தெரியாத சாமி சமீபத்தில் சொந்த ஊர் திரும்பிய போது அவரது மனைவி வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளர். இந்நிலையில் ராஜேஸ்வரி அவருடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். இதையடுத்து சாமி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “பாலாஜி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மேலும் என் மனைவி மற்றும் குழந்தைகளை அவரிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.