Categories
சினிமா

மலரும் நினைவுகள்…. “40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்”…. அதே இடத்திற்கு சென்ற கமலஹாசன்….!!

கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் கமலஹாசனுடன் பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு சென்றுள்ளார். கமலஹாசனை கண்ட திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கவுதம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் எங்கள் தியேட்டர்களை வந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 1979ஆம் ஆண்டில் கல்யாணராமன் படத்தின் 100வது நாள் விழாவை ஒட்டி எங்கள் தியேட்டருக்கு வந்தார்.

விக்ரமன் பட ஷூட்டிங்கிற்காக இந்த இடத்தை தேர்வு செய்த லோகேஷ் கனகராஜ் சாருக்கு நன்றி என கூறியுள்ளார். அதோடு அவர் 1979ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கமலின் ஆட்டோகிராப் வாங்கிய அதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விக்ரமன் படத்தை பொருத்தவரை கமலஹாசன் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடி யார் என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அவருக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி மைனா நந்தினி, வி.ஜே மகேஸ்வரி, சிவானி என மூன்று ஜோடிகளாம்.

Categories

Tech |