Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மலரும் நினைவுகள்….. “வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….!!!!!!

பேட்டையில் ம.தி.தா இந்து கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் ம.தி.தா இந்து கல்லூரி இருக்கின்றது. இங்கு 1975 முதல் 1978 வருடம் வரை வணிகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்க துணை முதல்வர் சேகர், வணிகவியல் துறை தலைவர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

மேலும் முன்னாள் பேராசிரியர்கள் சுந்தர்ராஜன், சிவசங்கரன், சிவசுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் நிகழ்ச்சியை நாகசுப்பிரமணியன் தொகுத்து வழங்க முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

Categories

Tech |