அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையிநேற்று ல் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுசூதனின் உடல் மருத்துவமனையிலிருந்து தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, மதுசூதனன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.