Categories
சினிமா

மறைந்த புனித் ராஜ்குமார்…. வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய பிரபல நடிகர்…!!!

மறைந்த புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று நடிகர் அல்லு அர்ஜுன் ஆறுதல் கூறினார்.

கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் தன் நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் ஈர்த்து வந்தார். இவர் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (பிப்ரவரி 4) புனித் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரரான சிவராஜ்குமாரை பார்த்து ஆறுதல் கூறினார். இதனை அல்லு அர்ஜுன் அங்கே எடுத்த புகைப்படங்களோடு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |