பிரபல தயாரிப்பாளருக்கு சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 20ஆவது படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிவருகிறது. அனுதீப் இயக்கும் இந்தப் படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷங்கா கதாநாயகியாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங் திடீரென காலமானார். அவருக்கு சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.