மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார்.
இந்நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவை அடுத்து, மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார் நித்யானந்தா. அருணகிரிநாதரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கைலாசா கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். அடுத்த 13 நாட்களுக்கு அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக பரபரப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் 13 நாட்கள் துக்கம் அனுசரிப்பு முடிந்த பிறகு அருணகிரிநாதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்ற நித்தியானந்த அறிவித்துள்ளார். அருணகிரிநாதரின் உடல் அடக்கம் முடியும் வரை கைலாசாவாசிகள் விரதம் இருக்க வேண்டும். சிறுவர்களுக்கு விரதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அருணகிரிநாதர் நினைவாக கைலாச வாசிகள் அன்னதானம், பசு தானம், தங்கம் மற்றும் வெள்ளி தானம் வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.