Categories
மாநில செய்திகள்

மறுவாக்கு எண்ணிக்கைக்கான கோரிக்கை வரவில்லை….தமிழக தேர்தல் அதிகாரி….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் எந்த தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான கோரிக்கை வரவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மின்னணு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவை 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றார். தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் மே 4ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |