கொரோனா பரவல் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால் திரையரங்குகள் மூடப்படலாம் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.
இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையும் கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நவம்பர் 13ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என உறுதியளித்திருந்தார். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே மாதம் இரண்டாம் தேதி வலிமை படம் திரையிடப்படும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன.