Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. வேகமெடுக்கும் கொரோனா தொற்று…. பீதியில் நடுங்கும் பொதுமக்கள்….!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் படை எடுப்பதால் மக்கள் பீதியில் உள்ளார்கள்.

தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இத்தொற்று அனைத்து பகுதிகளிலும் சுகாதார பேரழிவினை உண்டாக்கியதோடு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படுத்தியது. ஆனாலும் அரசாங்கம் இத்தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. அதனால் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் மதுரையில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20,866 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |