உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து ஆறு மாதங்களாக நடைபெற்று வருகின்றது. போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மீண்டும் மருத்துவம் படிக்க உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றார்கள். உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாடு திரும்பியிருக்கின்றனர். இந்த நிலையில் போர் தொடங்கிய ஆறு மாதங்கள் ஆகிய நிலையிலும் தற்போதும் நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் போர் பதற்றம் இருக்கின்றது. மேலும் மேற்கு பகுதியில் இருந்து இயல்புநிலை திரும்பி இருக்கிறது. இந்த சூழலில் மேற்கு பகுதியில் தான் அதிகமான மருத்துவ பல்கலைக்கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதனால் இந்த பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்த சூழலில் தற்போது மாணவர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வர அழைப்பு விடுத்திருக்கின்றது. இதனை தொடர்ந்து ரஷ்ய போரின் போது அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த இந்திய மாணவர்கள் மீண்டும் உக்கிரைனுக்கு செல்வதற்கு தயாராக இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆன்லைன் மூலம் படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால் இந்திய மாணவர்கள் பலர் தங்களின் உயிரைப் பனையம் வைத்து மீண்டும் உக்ரைன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி கேரள மாணவர் பேசும்போதும் உக்ரைன்ல் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 வருடம் படித்து வருகின்றேன். எனக்கு இன்னும் ஆறு மாத காலம்தான் வகுப்பு இருக்கிறது போர் காரணமாக இந்தியா திரும்பினேன். ஆனால் தற்போது மீண்டும் அழைப்பு விடுத்ததால் மூன்று வாரத்திற்கு முன் சுற்றுலா விசா மூலமாக திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தின் வாயிலாக துபாய் சென்று அங்கிருந்து மால்டோவா சென்றேன் அதன் பின் அங்கிருந்து பஸ்ஸில் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து பல்கலைக்கழகம் சென்றேன் என தெரிவித்துள்ளார்.