தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது வெளியான விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் 5 நிமிடங்களில் நடித்திருந்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் தற்போது பாலா இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படமாகும். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பாலாவிற்கு சூர்யாவுக்கு இடையே பிரச்சனை அதனால் சூர்யா படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பியதாகவும் படம் கைவிடப்பட்டதாகவும் வதந்தி கிளம்பியது.
இதற்கு சூர்யா, “விரைவில் பாலாவின் படத்தில் இணைய ஆவலாக உள்ளேன்” என்று ட்வீட் போட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வதந்தி பரவி வருகின்றன. அதாவது சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் படம் கைவிடப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வதந்தியை சூர்யா தரப்பு மறுத்துள்ளது. மேலும் சூரியா மற்றும் சிவாவின் படம் விரைவில் துவங்கும் என்றும் அப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் என்று சூர்யா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. எனவே இவ்வாறு தன்னை பற்றி அடுத்தடுத்த வதந்திகளை பரப்புவதால் சூர்யா செம கடுப்பாக உள்ளார் என்று தெரிகிறது.