Categories
மாநில செய்திகள்

மறந்துராதீங்க…! 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு எண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |