Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கை பார்த்த பொதுமக்கள்….. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

மர்ம விலங்கின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மற்றும் 1 கோழி ஆகியவற்றை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது தெருநாய்கள் கடித்ததால் ஆடுகள் மற்றும் கோழி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புளியம்பட்டி பகுதியில் மர்ம விலங்கு ஒன்று நடமாடுவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |