Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கின் அட்டகாசம்…. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஆடுகள்….. பீதியில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் ஒபிலேசன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கொட்டகையில் அடைக்கப்பட்ட ஆடுகளை பார்த்த போது 3 குட்டிகள் உள்பட 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு ஒபிலேசன் அதிர்ச்சடைந்தார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஆடுகளை எந்த மர்ம விலங்கு கடித்து கொன்றது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |