Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்களின் சதிச்செயல்….. 2 நாய்களின் கால் உடைப்பு…. 3வது நாய் கொலை…!!

பிரியாணியில் விஷம் கலந்து நாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும்  வம்பாகீரபாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் மூன்று நாய்களை தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் இரண்டு நாய்களின் காலையும் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்தனர். அவை இரண்டுக்கும் மோகன் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் வளர்த்த மற்றொரு பொம்மேரியன் நாய் குட்டி வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளது.

நாயின் அருகே பிரியாணி பொட்டலம் கிடந்ததால் அதில் விஷம் கலந்து இருக்கக்கூடும் என்று மோகன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் நாயின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பிரியாணியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். பின்னர் பிரியாணியில் விஷம் கலந்திருந்தது தான் நாய் இறந்ததற்கு காரணம் என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த பெருமாள் என்பவர் நாய்களை அதிகமாக துன்புறுத்தியதாகவும் ஒரு நாயை அவர் கொலை செய்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |