Categories
உலக செய்திகள்

மர்மநபரின் வெறிச்செயல்…. வலைவீசிய போலீசார்…. பிரபல நாட்டில் நீடிக்கும் பதற்றம்….!!

கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பலர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் 10வது ஜே ஸ்ட்ரீட்ஸ்  பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ட்விட்டர் வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில் தொடர்ந்து சுடும் சத்தம் கேட்டு பொதுமக்கள் உயிருக்கு பயந்து சிதறி ஓடுகின்றனர்.  இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் அதிகமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று போலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |