மும்பையைச் சேர்ந்த வயதான தம்பதியினர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் தங்களுடைய மகன் மற்றும் மருமகள் தங்களை பராமரிப்பதில்லை என்றும் இருவரும் வீட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் மாதந்தோறும் அவர்களின் செலவுக்காக ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வீட்டிலிருந்து மகன் மற்றும் மருமகள் இருவரும் வெளியேர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து மருமகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில், திருமண சச்சரவுகளை காரணம் காட்டி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது. இதுபோன்ற செயல்பாடுகள் குடும்பத்தில் பெரிய விரிசல்கள் உண்டாக்கும். ஒரு பெண்ணுக்கு புகுந்த வீடு மற்றும் பிறந்த வீட்டில் வசிப்பதற்கான அனைத்து உரிமையும் இருக்கிறது. மேலும் மருமகள் முறையாக நடந்துகொள்ள வேண்டும். மாமனார் மாமியாருக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் எச்சரிக்குமே தவிர அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றும் முடிவை ஆதரிக்காது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.