புடவையில் மருமகளுடன் உடற்பயிற்சி செய்யும் மாமியாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னையில் வசித்து வரும் 56 வயது பெண் ஒருவர் ஜிம்மில் புடவை கட்டிக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவானது ஹியூமன்ஸ் ஆப் மெட்ராஸ் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான அந்தப் பெண் கால் மற்றும் முழங்கால் வலியால் வேதனைப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் பின் அவரது மருமகளுடன் ஜிம்மிற்கு சென்று தினமும் உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.
புஷ் அப் மற்றும் பவர் லிப்ட் போன்ற உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்துள்ள நிலையில் தற்போது அவர் கால் மற்றும் முழங்கால் வலியில் இருந்து குணமடைந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த வீடியோவின் கேப்சனில் அந்தப் பெண்ணிற்கு 56 வயதாகின்றது. அதனால் என்ன அவள் புடவை அணிந்து சாதாரணமாக பவர் லிப்டிங் மற்றும் புஷ்அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வருகின்றார்.
வயது என்பது வெறும் எண் மட்டுமே. அர்ப்பணிப்பு மற்றும் மருமகளின் ஆதரவுடன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகின்றார். 56 வயதான இந்தப் பெண்ணின் உடற்பயிற்சி வீடியோவை பார்த்த பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது உத்வேகம் அளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் மட்டுமல்லாமல் பெண்களுக்கான ஒவ்வொரு தடைகளையும் உடைத்து எரிகிறது என மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.