மருந்து உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதை தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிசன் பற்றாக்குறையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இவற்றை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொரோனா சிகிச்சை மருந்துகள் உபகரணங்கள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி அளிக்கப்படுகின்றது. ஆக்சிசன் ரெம்டெசிவர் 12%, வென்டிலேட்டர் போன்றவை மீது 20% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்