Categories
மாநில செய்திகள்

மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்க புதிய விதிமுறைகள்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்குவதற்கு புதிய விதிமுறைகளை தமிழக மருத்துவ கவுன்சிலிங் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேல் பெற வேண்டும் என்றால் பிளட் டெஸ்ட்,இசிஇ எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகள் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளின் விடுப்பு நாட்கள் வழங்கும்போது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

விடுப்பு சான்றிதழ் வழங்கும் மருத்துவர் தனது நோயாளியின் விவரங்களை பதிவேற்று எண்ணின் வரிசை எண் மற்றும் உள்நோயாளி என்றால் வரிசை எண் பதிவேடு வரிசையில் குறிப்பிட வேண்டும். மருத்துவ சான்றின் ஒரு நகலை அவர் எப்போதும் பராமரிக்க வேண்டும். மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு மருத்துவ சான்று அளிக்கப்பட மாட்டாது. தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவ விடுப்பு சான்றிதழை மருத்துவர்கள் வழங்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |