தமிழகத்தில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் பிப்ரவரி 16-ல் இருந்து பிப்ரவரி 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதிக்குள் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வந்து தங்களுடைய சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories
மருத்துவ மாணவர்களே…. வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!
