சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வெளிநாட்டுகளுக்கு சென்று ஹோம் சர்ஜன் செய்யும் மருத்துவ மாணவர்கள் CRRI பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழக NMC-க்கு ரூபாய் 3 லட்சம் கட்ட வேண்டும்.
அதன் பிறகு மருத்துவ நல்வாழ்வுத்துறைக்கு ரூபாய் 2 லட்சம் கட்ட வேண்டும். இந்த கட்டணத்தை இனி செலுத்த வேண்டாம் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்துவிட்டு தமிழகம் வரும் இந்திய மாணவர்கள் CRRI பயிற்சி மேற்கொள்வதற்கு இனி ரூபாய் 30 ஆயிரம் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.