Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மருத்துவ மதிப்பீட்டு முகாம்…. 150க்கும் மேற்பட்ட… மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்பு..!!

அன்னவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன் பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் மற்றும் அலுவலர் தங்கமணி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் கலந்துகொண்ட காது , மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவர், குழந்தை நல மருத்துவர் , மாவட்ட மாற்றுத்திறன் அலுவலர் உலகநாதன்  ஆகியோர் மாணவர்கள் மற்றும் குழந்தைகளை பரிசோதித்து அவரவர்களுக்கான உபகரணங்கள் பாதுகாப்பு பயணப்படி, அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்தனர்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரகுநாததுரை  மற்றும் அன்னவாசல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரோஸ்மேரி சகாயராணி ஆகியோர் தலைமையில் வட்டார வள மைய சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் உடலியக்க நிபுணர்கள் இந்த ஏற்பாடுகளைச் இணைந்து செய்தனர். பள்ளி தலைமையாசிரியர் உள்பட பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அன்னவாசல் வட்டார வள மையத்திற்குட்பட்ட 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Categories

Tech |