Categories
மாநில செய்திகள்

“மருத்துவ படிப்பு” இன்று வெளியாகும் பட்டியல்…. அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை இடங்கள்….?

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளின் 2021- 22ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது 2021 டிசம்பர் 19ம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ,மாணவிகள் விண்ணப்பித்தனர். அவ்வகையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேர்  என மொத்தம் 40,788 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தேர்வு செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலை நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்  இன்று மாலை சென்னையில் வெளியிட உள்ளார். அதோடு https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய இணையதளங்களிலும் தரவரிசைப் பட்டியலை பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வரும் 27 ஆம்   தேதி கலந்தாய்வு நேரடியாக நடைபெற இருக்கிறது.  28 மற்றும் 29 ஆம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதை, தொடர்ந்து 30 ஆம் தேதி பொது கலந்தாய்வும் தொடங்குகிறது. இதில் அதிக அளவில் மாணவ மாணவியர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இணைய வழியில்  இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. அது தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு இட ஒதுக்கீட்டுக்கு 2,650 இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கு போக 4,349 இடங்கள் என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கிறது. இதில், அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீட்டை கருத்தில்கொண்டு எம்பிபிஎஸ் படிப்பில் 436 இடங்கள், பிடிஎஸ் படிப்பில் உள்ள 98 என மொத்தம் 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

Categories

Tech |