Categories
உலக செய்திகள்

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்… ரஷ்ய பல்கலைக்கழகம்…!!!

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ரஷ்ய துணை தூதர் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவுக்குகான ரஷ்ய துணை தூதர் அலியக் என்.அவ்தீவ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சசி பல்கலைக்கழகங்களின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் சேர விரும்புகின்ற மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விதிகளின்படி பிளஸ் 2 வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓ.பி.சி., எஸ்சி, எஸ்டி பிரிவினை சார்ந்த மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களை அவசியம் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பு தமிழ் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவின் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பிற்கு இணையாக, ரஷ்ய மருத்துவ பல்கலைக் கழகங்கள் எம்.டி என்ற பெயரில் இளங்கலை மருத்துவப்பட்டங்களை வழங்கி வருகின்றன. அதனை ஆங்கில மொழியில் கற்பதற்கு 6 ஆண்டுகளும், ரஷ்ய மொழியில் கற்பதற்கு 7 ஆண்டுகளும் அவசியம் வேண்டும். அதே சமயத்தில் பல்கலைக்கழகங்கள் இளங்கலை மற்றும் முதுகலை என இரு மட்டங்களிலும் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையின் முதல்கட்ட பணிகளை தொடங்கி இருக்கின்றன.

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்புகின்ற இந்திய மருத்துவ மாணவர்களுக்கு, இணைய வழி மூலமாக பாடங்களை தொடங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆன்லைன் வகுப்புகள் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தொடங்கி நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளது. ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்வி கற்க விரும்புபவர்கள் மற்றும் முன்பதிவு செய்பவர்கள் www.studyabroadedu.com என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 9282221221 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |