Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கான தகுதி சான்று…. இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும்…. இன்று முதல் புதிய நடைமுறை….!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவர் நலனை கருதி நடப்பு கல்வி ஆண்டு முதல் எளிமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி இனி ஒவ்வொரு மருத்துவ படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதி சான்று விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கும், நர்சிங் மற்றும் பிபா உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கும் சேர்வதற்கு தகுதி சான்று பெறுவது அவசியம். இந்நிலையில் மாணவர்களின் வசதிக்காக பழைய நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் இன்று முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |