சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் கடந்த 18ஆம் தேதி தொடங்கி உள்ளது. அன்று முதல் நேற்று வரை ஏழு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடந்து முடிந்தது. இந்த நிலையில் சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை அடுத்து வருகின்ற 23 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கூட்டம் தொடங்குகிறது.