Categories
மாநில செய்திகள்

மருத்துவர் தினத்தில்…. மநீம தலைவர் கமலஹாசன் அறிக்கை…!!!

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய இக்கட்டான சூழலில் உலகம் முழுவதும் மருத்துவர்கள் தான் கடவுளாக இருந்து மக்களை காத்து வருகின்றனர். குடும்பத்தை மறந்து உன்னதமான பணியில் ஓயாது பணியாற்றி வரும் இந்நாளில் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின்  இன்னல்களை கருத்தில் கொண்டு அவர்களுடைய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் மருத்துவ தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டில்தான் அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களை விட குறைவான ஊதியம் வழங்கப்படும் நிலை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |