மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கோபிநாத் என்பவர் சரண் அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவரான பாலாஜி போலி மருத்துவ சான்றிதழ் வழங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதி பொய்யான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் வழக்கத்தை அடியோடு ஒழித்து, அப்படி வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் மருத்துவர்கள் யாருமே பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்காமல் இருப்பதை மருத்துவ கவுன்சில் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.