Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவரே இப்படி செய்யலாமா…? கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

அரசு மருத்துவர் சரியாக பணி புரியாத காரணத்தினால் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இந்த மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவர் மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை எனவும் மருத்துவர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வர்த்தக சங்க செயலாளர் தலைமையில் பொதுமக்கள்  நகராட்சி மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அப்போது மருத்துவர் பணியில் இல்லாமல் அருகே உள்ள கட்டிடத்தில் இருக்கும் நகராட்சி கமிஷனர் உடன் பேசிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மருத்துவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயம் நகராட்சி கமிஷனரிடம் பொதுமக்கள் மருத்துவர் தங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், பணிக்கு மிகவும் தாமதமாக வருகின்றார் எனவும் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் இதே நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் மருத்துவமனையை பூட்டி சாலையில் மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |