Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள்…. விரைவில் அதிரடி மாற்றம்…. செம குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது செவிலியர் மருந்தாளுநர் உட்பட மருத்துவ சேவை சார்ந்த பணியிடங்களில் டிப்ளமோ முடித்தவர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், சமீபகாலமாக பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டிப்ளமோ முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக செவிலியர், மருந்தாளுநர் உட்பட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளை போன்றே, மருத்துவம் சார்ந்த அனைத்து டிப்ளமோ படிப்புகளையும் பட்டப்படிப்புகளாக மாற்றுவதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலினால் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை முடித்தவர்கள் வேதனையில் உள்ளனர்.

மேலும் இதுகுறித்து அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஏற்கனவே மருந்தாளுனர் பணியிடங்களில் பி.பார்ம் படித்தவர்களை பணியமர்த்தி வருகின்றனர். அதைப்போன்று, செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ சேவையில் இதுபோன்ற டிப்ளமோ முடித்தவர்கள் நட்டாற்றில் விடுவது சரி இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக டிப்ளமோ படிப்புகளை நடக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளன. அதாவது மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகளை பி.எஸ்சி நர்சிங் போன்று பட்டப்படிப்புகளாக மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |