Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையை நாடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு….!! சுகாதாரத் துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

ஹைதராபாத் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்படுவது சுகாதாரத் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹைதராபாத்தில் ஒரு நாளைக்கு 3 முதல் 5 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றன என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் மூலமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது சுகாதார துறையை கவலையடையச் செய்துள்ளது. மேலும் இந்த குழந்தைகள் லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குடும்பத்திலுள்ள ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்போது 50 சதவிகிதம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆராய்ச்சி முடிவு கூறியுள்ளது. எனவே யாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |