Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி…. பெரும் சோகம்….!!!!

செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தாலும் அங்கிருந்த 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆண்டு இதனைப் போலவே குழந்தைகளுக்கான பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |