ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன.
இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ரஜினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்புகான எந்த அறிகுறியும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் அர்ஜுனிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். ரஜினியின் உடல் நலம் குறித்த தொலைபேசி மூலம் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ரஜினி அப்போலோவில் சிகிச்சை பெற்று வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.