Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… வெளியான பரபரப்பு அறிக்கை…!!!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் காலை மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலிக்கு இரண்டாவது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவரின் உடல் நிலை பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

Categories

Tech |