இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்றார். இது இன்று முதல் 3 நாள் நடைபெறுகின்றது. இந்த கருத்தரங்கில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்றனர். இதில் காணொளி மூலமாக பேசிய பிரதமர், இந்தியா திறமைகளின் அதிகார மையம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது.
இலவச சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள், கடன் ஆகியவை பயனாளர்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இயற்கையை இறைவனாக வழிபடுவதுதான் இந்தியர்களின் மரபு. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும்.
கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும்.இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று மோடி கூறினார்.