நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 33 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.