Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநில ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!! கூடுதலாக இயக்கப்படும் ரயில் சேவைகள்…!!

மத்திய ரயில்வேயில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 36 மின்சார ரயில்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மராட்டிய மாநிலத்தின் மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் மற்றும் மெயின் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 1,774-யில் இருந்து 1,810 ஆக அதிகரித்து உள்ளது.இதேபோல ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கையும் 10-ல் இருந்து 44 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 25 மின்சார ரயில்கள் அதிவிரைவு ரயில்கள் ஆகும் புதிதாக இயக்கப்பட உள்ள ரயில்களின் புறப்படும் நேரம் கழித்து ரயில்வே துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |