Categories
தேசிய செய்திகள்

மராட்டியம் வந்த 6 பேருக்கு…. ஒமிக்ரான் கொரோனா உறுதி…. அதிர்ச்சி தகவல்…!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. அந்த வகையில் மராட்டியத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இருப்பினும் தென்னாப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளிலிருந்து  மராட்டியம் வந்த ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்களை சோதனை செய்ததில் அறிகுறிகள் அற்றவர்களாக அல்லது லேசான அறிகுறிகளை கொண்டிருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |