மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 303 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கின்றது. மராட்டியத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகின்றது. அந்தவகையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் மொத்த எண்ணிக்கை 12,290 ஆக உயர்ந்துள்ளது. அதில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,850 ஆக இருக்கின்றது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவிற்கு உயிரிழந்த காவலர்களின் மொத்த எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.