Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் பன்றி காய்ச்சலுக்கு 7 பேர் பலி…. வெளியான தகவல்….!!!!

மராட்டியத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி மராட்டிய பொது சுகாதாரதுறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 142 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மும்பையில் எச்.1.என்.1 பாதிப்புகள் 43 பேருக்கும், புனே, பால்கர் மற்றும் நாசிக்கில் முறையே 23, 22,17 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

நாக்பூர், கோலாப்பூரில் தலா 14 பேருக்கும், தானேவின் 7 பேர், கல்யாண்-தோம்பிவிலியில் 2 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் புனேவில் 2 பேர், கோலாப்பூரில் 3 பேர் மற்றும் தானே மாநகராட்சியில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |