மரபணு மாற்றம் செய்த பயிர் விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை எடுத்துள்ளார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் இருக்கும் விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுக்கவில்லை. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இது போன்ற தடை செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் விதைகளை விற்பனை செய்வதும் வாங்கி பயிரிடுவதும் சட்டப்படி குற்றமாகும்.
இதை விற்பனை செய்வது தெரியவந்தால் விதை ஆய்வாளர் ஆனது விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தடை செய்யப்பட்ட இந்த விதையை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக மாவட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.